ஜனாதிபதி நாளை (டிசம்பர் 07) இரணைமடுவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகளை  திறக்கும் பொருட்டு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியான போதும் மாகாண மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் எவரும் இதனை உத்தியோகபூர்வமாக  தெரிவிக்கவில்லை.

ஆனாலும் இன்றைய தினம் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் கேபி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி  இராணுவ உயரதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்  நேரடியாக  இரணைமடு குளத்திற்கு சென்று  ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

அத்தோடு பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  இன்றிரவு 8.20மணியளவில் நேரடியாக சென்று குளத்தின் நிலமைகளை அவதானித்துடன் நீர்ப்பாசன பொறியியலாளர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.