தசை வளர்ச்சியை உணவுகளின் மூலம் கொண்டு வர இயலும் என ஆய்வுகள் சொல்கின்றன. சாதாரண உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தசை வளர்ச்சி அதிகரிக்குமாம். எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் தசை வளர்ச்சி கூடும் என்பதை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

தசை வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்கிற ஆசை உங்களுக்கு உள்ளதா? அப்போ தினமும் 5-8 பாதாம் சாப்பிட்டு வாருங்கள். பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு அதிக வலுவை தந்து தசை வளர்ச்சிக்கு உதவும்.

புரதசத்து அதிகம் கொண்ட உணவுகளில் முட்டை முக்கியமானதாகும். அன்றாடம் 1 அல்லது 2 முட்டையை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கூடிய விரைவிலே தசை வளர்ச்சியை அதிகரிக்க முட்டை அற்புதமான உணவாகும்.

தசை வளர்ச்சியை உடனே அதிகரிக்க மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும். புரதசத்து மீனில் அதிக அளவில் உள்ளதால், உடலை கட்டுமஸ்தாக மாற்றி விடும். மேலும், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் மீன் உதவுகிறது.

சாதாரண பாலை விட சோயா பாலை குடித்து வருவதால் தசை வளர்ச்சி சீராக இருக்கும். உடனடியாக தசை வளர்ச்சியை கூட்ட சோயா பால் சிறந்த தேர்வாகும். மேலும், இது தாவரத்தில் இருந்து பெறப்படும் பால் என்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

கவர்ச்சியான தசையை பெற வேண்டுமென்றால் அதற்கு பல் பொருட்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது நல்லது. குறிப்பாக பால், சீஸ், தயிர் போன்றவை தசையின் வளர்ச்சிக்கு அருமையான உணவாகும்.