இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் ஃபைனலுக்கு, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றது. இதில் இங்கிலாந்து அணி அரையிறுதியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

இப்போட்டியில் இங்கிலாந்து துவக்க வீரர் ஜேசன் ராய்க்கு, அம்பயர் குமார் தர்மசேனா, தவறுதலாக அவுட் கொடுத்தார். இதனால் கடுப்பான ராய், அம்பயருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஃபைனல் போட்டியில் ஜேசன் ராய்க்கு தடைவிதிக்கப்படும் அபாயம் இருந்தது. ஆனால், ஐசிசி., இவருக்கு 30 சதவீதம் மட்டும் அபராதம் விதித்துள்ளது. இதனால் ஃபைனல் போட்டியில் பங்கேற்காமல் இருப்பதில் இருந்து ராய் தப்பினார்.

தவிர, தன் தவறை ராய் ஒப்புக்கொண்டால் அவர் எவ்வித விசாரணைக்கும் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.