இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டம் இன்று சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிக்கோலஸ் பூரன் மட்டும் அரைசதம் கடந்தார். இறுதியில் 44.4 ஒவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களே சேர்த்தது. இதனால் இங்கிலாந்து வெற்றிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க முதலே பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தியது. அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ஜோ ரூட் இந்த உலகக்கோப்பையில் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.

இதையடுத்து 33.1 ஒவர்களில் இலக்கை எளிதாக எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜோ ரூட் சரியாக 100 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.