இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டான்ஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த டி 20 தொடர் டிராவில் முடிந்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முதல்முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 71 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி சிட்னியில் நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மிடில் ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்க முடியும். டெஸ்ட் போட்டியில் எனது பேட்டிங் சரியில்லை. அதனால், இந்தப் போட்டித் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்வேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, கலீல் அகமது

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கரே, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், நாதன் லைன், பீட்டர் சிடில், ஜே ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரெண்ட்ராப்