அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலினியா டிரம்ப் பிரிட்டன் அரசி எலிசபெத்தை சந்தித்தனர்.

பக்கிங்காம் அரண்மனையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.இருவருக்கும் பிரிட்டன் ராணி மதிய விருந்து அளித்தார்.

பிரிட்டனில் பயணம் மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு (பிரிட்டன் நேரப்படி) ஸ்டான்ஸ்டெட் விமானதளம் சென்றடைந்தார்.

லண்டன், மான்செஸ்டர், பெல்பாஸ்ட், பிர்மிங்ஹாம் , நாட்டிங்ஹாம் உள்பட பிரிட்டன் முழுவதும் டிரம்பின் பயணத்தின்போது போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னால் பிரிட்டனின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவு அளிப்பதாக அதிபர் டிரம்ப் த சன் ஊடக நிறுவனத்திடம் தெரிவித்தார்.