உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் வே எனப்படும் விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டனர்.

திங்கள்கிழமை காலை ஆக்ரா அருகே இந்த விபத்து நடந்துள்ளது.

லக்னோவில் இருந்து தலைநகர் டெல்லிக்கு சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் சுமார் 50 பேர் பயணித்தனர்.

இந்தியாவில் விபத்துகள் ஏற்படுவது அடிக்கடி நிகழும். ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு விபத்து ஏற்படுகிறது.

பேருந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த உள்ளூர்வாசிகள், அங்கு விரைந்து வந்து காயமடைந்த 20 பயணிகளை மீட்டனர்.

பேருந்து ஓட்டுநர், பேருந்தை இயக்கும்போது தூங்கி விட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நெடுஞ்சாலையில் இருந்து விலகி ஓடி பள்ளத்தில் விழுந்தது.

டெல்லியில் இருந்து ஆக்ரா வரையில் செல்லும் யமுனா எக்ஸ்பிரஸ்வே, இந்தியாவின் நீளமான ஆறுவழிச்சாலைகளில் ஒன்றாகும்.