ட்விட்டரில் தொடர்ந்து புதிய வசதிகள் சேர்க்கப்பட்ட வண்ணம் உள்ளது, அதன்படி ரீட்வீட் செய்ய ஜிஃப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் வசதி தற்சமயம் வழங்கப்படுகிறது. மேலும ஏற்கனவே
ரீட்விட் செய்யும் போது கமெண்ட் மட்டும் செய்ய முடியும். ரீட்வீட் செய்யும் போது அதில் மீடியா எதையும் சேர்க்க முடியாது.

இதற்குமுன்பு ரிபோர்ட், ஹைட் ரிப்லைஸ் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டன,விரைவில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் இப்போது வெளிவந்த புதிய அப்டேட் மூலம் ட்விட்டரில் ரீட்விட் செய்யும் போது ஜிஃப் புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை சேர்க்க முடிகிறது. இந்த அம்நம் பயன்படுத்தும் போது ஜிஃப் வீடியோ மற்றும் புகைப்படங்களை உள்ளிட்டவற்றால் தகவலின் அளவு அதிகரிக்கும்.

இந்த புதிய அம்சம் வழங்குவதற்கென ட்விட்டர் டைம்லைன், ட்வீட் டீடெயில் பக்கம் மற்றும் பல அம்சங்களில் மாற்றம் செய்ய வேண்டி இருந்ததாக ட்விட்டர் தெரிவித்திருக்கிறது. ரீட்வீட் அம்சம் ஆண்ட்ராய்டுஇ ஐ.ஓ.எஸ். இயங்குதளம் மற்றும் மொபைல் வலைதளம் உள்ளிட்டவற்றில் ஏற்கனவே கிடைக்கிறது. எனினும்இ வலைதள பதிப்பில் இதுவரை இதற்கான அப்டேட் வழங்கப்படவில்லை.