உலகளாவிய ரீதியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான தரப்படுத்தலில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் குறிப்பிடத்தக்க விளைவை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கமும், பொதுமக்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். உலகலாவிய ரீதியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான தரப்படுத்தலில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றிருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் செயற்திறனை உணர்த்துகின்றது. எனினும் அதன் அமுலாக்கம் தொடர்பான இவ்வாண்டுக்கான மதிப்பீட்டில் இலங்கை மஞ்சள் நிறத்தையே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது என்று ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.