அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கெமரன் பென்கிரொப்ட் பேர்த் கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடுவதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பென்கிரொப்ட் உட்பட டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது கழக கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு பென்கிரொப்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு அவுஸ்திரேலிய கழக கிரிக்கெட் கட்டுப்பாடுகளின் படி தேசிய கிரிக்கெட் அணியில் தடைசெய்யப்பட்ட வீரர்கள் பேர்த்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த போட்டித் தொடரில் பென்கிரொப்ட் விளையாட அனுமதி கோரி தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது. குறித்த தேர்தலில் 14 கழகங்கள் பென்கிரொப்ட் விளையாடுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் பென்கிரொப்ட் தடைக்கு முன்னர் கழக கிரிக்கெட் தொடரில் விளையாடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.