ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியானது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூலில் யார் முந்தியது என்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் வசூலில் விஸ்வாசம் தான் முன்னிலையில் உள்ளது.

பேட்ட படம் ரிலீஸான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் பேட்ட வசூல் ரூ. 23 கோடி ஆகும். ஆனால் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ. 26 கோடி வசூலித்துள்ளது. மேலும் உலக அளவில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் அல்ல கேரளாவிலும் விஸ்வாசம் தான் வசூலில் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் விஸ்வாசம் ஆட்சி செய்வது போன்று வெளிநாடுகளில் பேட்ட தீயாக வசூல் செய்து கொண்டிருக்கிறது.