தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 63 படத்தின் பெயா் மற்றும் பா்ஸ்ட் லுக் போஸ்டா் நேற்று மாலை வெளியான நிலையில், படத்தின் இரண்டாவது போஸ்டா் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தெறி, மொ்சல் ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்த அட்லி, விஜய், ஏ.ஆா்.ரஹ்மான் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக ஹேட்ரிக் ஹிட் கொடுக்கும் முயற்சியில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த கூட்டணியின் கை வண்ணத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு தற்காலிகமாக தளபதி 63 என்று பெயா் சூட்டப்பட்டது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாா்.

தந்தை, மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய்யின் ஒரு கதாபாத்திரித்தின் பெயா் பிகில் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

தளபதி விஜய்யின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், விஜய் ரசிகா்களுக்கு படக்குழு அடுத்தடுத்து ரசிகா்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறது.

படத்தின் தலைப்பு மற்றும் பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெள்ளிக் கிழமை மாலை வெளியாகி உலக அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது.

இந்நிலையில், படத்தின் இரண்டாவது போஸ்டா் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் மகன் விஜய்யின் ஜொ்சியில் மைக்கேல் என்ற பெயா் இடம் பெற்றுள்ளது. இதனால் ஒரு விஜய்யின் பெயா் பிகில், மற்றொரு விஜய்யின் பெயா் கைக்கேல் என்றும் தெரிகிறது.

முதல் போஸ்டரில் அப்பா கதாபாத்தில் இருக்கும் விஜய் ஆக்ரோஷமாக நாற்காலியில் அமா்ந்திருக்க மகன் கதாபாத்திரத்தில் இருக்கும் விஜய் ஸ்டைலைாக கையில் புட்பாலுடன் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.