வாழ்க்கை ஒரு வசந்­தம். குடும்­பம் ஒரு கோயில். நல்ல குடும்­பம் பல்­க­லைக்­க­ழ­கம். நட்­பு­டன் வாழ்ந்­தால் குதூ­க­லம் இப்­ப­டி­யெல்­லாம் குடும்­பத்­தைப் பற்றி உயர்­வு­டன் கூறு­வோம்.

ஆம் முன்­னொ­ரு­கா­லம் இவ்­வா­றான கூற்­றுக்­கள்; ஏற்­பு­டை­ய­தாக இருந்­தன. வலது காலை எடுத்து வைத்­துத்­தான் புது­ம­ணத் தம்­ப­தி­யர் வாசற்­படி தாண்­டு­வார்­கள். இல்­லத்­துக்கு அவ்­வ­ளவு முதன்மை இருந்­தது.

ஆனால் இல்­லம் இன்று இரண்­டா­மி­டந்­தான். முதலா­ மிடத்தை திரு­மண மண்­ட­பங்­கள் ஆக்­கி­ர­மித்து விட்­டன.

மங்­க­லம் பொங்­கும் மண­நா­ளும் மண மக்­கள் உறவு நாளும் இல்­லம் இடைஞ்­சல் என்று, ஏசி­யு­டன் ஹோட்­டல்­க­ளில் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றன. வாசற்­ப­டி­கள் தாண்­டப்­ப­டு­கின்­றன. வரன்­மு­றை­கள் மாற்­றம் பெறு­கின்­றன.

உற­வு­க­ளின் பலம்

எட்­டுக்கு மேல் பன்­னி­ரண்டு பிள்­ளை­க­ளைக் கொண்­ட­தாக எங்­கள் பேரன் பூட்­டன் காலத்­தில் குடும்­பங்­க­ளில் இருந்­ததை நாம் அறி­வோம். ஒரு வீட்­டில் கொண்­டாட்­டம் என்­றால் கொண்­டாட்­டத்­தின் முதல் நாளே அந்­தக் குடும்­பத்­தின் உற­வு­க­ளும் ஊர­வ­ரும் ஒன்­று­கூ­டு­வர்.

கொண்­டாட்­டத்­திற்கு செய்ய வேண்­டிய ஆயத்­தங்­களை எல்­லாம் தமது சொந்த குடும்­பத்­தின் வேலை­கள் போல எல்­லோ­ரும் கூடி செய்து முடிப்­பார்­கள். இந்த முதல் நாள் விருந்தை உற­வு­க­ளின் விருந்து அல்­லது ஊர்­வி­ருந்து என்று அழைத்­தார்­கள்.

இங்கு பிரி­வி­னை­கள் என்­பது மிக­வும் அரி­தா­கவே இருந்­தார்­கள் குறிப்­பிட்ட குடும்­பங்­க­ளின் பிள்­ளை­கள், மரு­மக்­கள், பேரப்­பிள்­ளை­கள் என்று அவர்­களே ஒரு பெருங்­கூட்­டம் போல இருந்­தது.

அத்­து­டன் உற­வி­னர்­க­ளும் சேர்ந்­து­விட மகிழ்­வும், ஆர­வா­ர­மும் களை­கட்­டி­யது. இன்று பிள்­ளைக­ ளுக்­குள்ளே பிரி­வினை கள், உற­வுக்­குள்ளே வேற்­று­மை­கள். எல்­லாப் பிள்­ளை­க­ளும் எல்லா உற­வு­க­ளும் சேர்ந்து கொண்­டா­டு­கின்­றன என்­றால் அது விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய அள­விலே நடை­பெ­று­கின்­றது.

பெற்­றோரை  பெரு­மைப்­ப­டுத்­தி­யது  அந்­தக் காலம்

அம்மா என்­றால், அப்பா என்­றால் முன்­னறி தெய்­வங்­கள்­தான். கீறிய கோட்­டைக் கடக்­காத பிள்ளை­ கள். சண்­டை­பி­டித்­தா­லும் சகோ­த­ரப் பாசத்­தை­விட்­டுக் கொடுக்­காத சகோ­த­ரங்­கள். மரு­மக்­க­ளைப் பிள்­ளை­க­ளை­விட மதித்த­ காலம். மரு­மக்­க­ளும் மறு பெற்­றோ­ராக மதிப்­ப­ளித்த காலம்.

உற­வுக்­காக எதை­யும் இழக்­கத் தயா­ராக இருந்த பாசப் பிணைப்­புக்­கள். அண்­ணன், அக்கா சகோ­த­ரர்­களை தங்­கள் பிள்­ளை­க­ளா­கவே கொண்­டா­டி­னர். அனைத்­துக்­கும் மேலாய் அன்னை, தந்­தை­யின் வார்த்­தையை சிர­சு­மேல் வைத்­துப் பணிந்­தார்­கள். செல்­வம் நிறைந்­தி­ருந்­தது.

மகிழ்­வும் நிலைத்­தி­ருந்­தது. அந்த வாழ்வு எமக்­கும் பசு­ம­ர­மான நினை­வா­கச் சிறக­ டிக்­கின்­றது. கண்­டதே காட்சி கொண்­டதே கோலம் என்­றில்­லா­மல், ஏற்­றதே வாழ்க்கை, இணைந்­ததே குடும்­ப­மென்­றும் சீறிச் சினக்­கா­மல், விட்­டுப்­பிரி ­யாமல் இறப்­பு­வரை இணைந்தே வாழ்ந்­தார்­கள்.

இல்­லற வாழ்­வில் காலத்­தின் மாற்­றம், கட­மை­யின் வேகம், பணத்­தின் பெறு­மதி பந்­த­பா­சங்­களை அறுத்­துள்­ளது.

அவ­ச­ர­மும் கோப­மும்

கணனி யுகம், வேலைப்­பழு, அதீத தேவை­கள், மதிப்­பான வாழ்வு இவை­யெல்­லாம் அவ­ச­ர­மும் கோப­மும் கொள்­ளும் நடத்தை மாற்­றங்­களை உரு­வாக்­கு­கின்­றன.

அவ­ச­ரப்­ப­டு­வ­தா­லும் ஆத்­தி­ரப்­ப­டு­வ­தா­லும் அழ­கிய வீடு கல்­லெ­றிந்த தேன்­கூ­டு­கள் போன்ற நிலைக்கு உள்­ளா­கின்­றது.

கண­வன், மனைவி, மக்­கள், மரு­மக்­கள், சகோ­த­ரர்­கள் அவ­ச­ர­மும் ஆத்­தி­ர­மும் கொள்­வ­தால் ஆயி­ரங்­கா­லப் பயிர் என்று கூறப்­ப­டும் குடும்ப வாழ்­வு­கள் எறி­க­ணை­கள் போன்று தொடுக்­கப்­ப­டும்.

முன்­நோக்­கிச் சிந்­திக்­காத இந்­தச் செயற்­பாட்­டால் பின்­னோக்கி வருந்­திப் பய­னில்­லா­மல் போய்­வி­டு­கின்­றது. வார்த்­தை­யின் தாக்­கம் ஒட்­ட­மு­டி­யாத சீனச்­சட்டி போலாகி­ விடு­கி­றது.

இத­னாலே அனேக குடும்­பங்­கள் பாதிக்­கப்­பட்ட நிலை­யிலே மெல்­ல­வும் முடி­யா­மல், விழுங்­க­வும் முடி­யாத போலி வாழ்­வு­களே தொடர்­க­தை­க­ளாக அரங்­கேற்­றம் பெறு­கின்­றன.

ஆத்­தி­ர­மும் அவ­ச­ர­மும் அவர்­க­ளின் ஞானக் கண்­களை மறைத்து­ விடு­கின்­றன. பிள்­ளை­கள் தொடுக்­கும் அம்­பு­கள் பெற்­றோரை உடைந்த கண்­ணா­டிப் பாத்­தி­ரம் போலாக்கி விடு­கின்­றது.

இத­னாலே பிரி­வி­னை­கள் ஏற்­ப­டு­கின்­றன. உற­வு­கள் சிதை­வ­டை­கின்­றன. பாசங்­கள் விசங்­க­ளா­கின்­றன. முறிந்த உற­வுக்கு முடிச்­சுப்­போட முடி­யாத சமூ­தாய வாழ்வே, வீட்­டுக்கு வீடு வாசற்­ப­டி­போல வீங்கி இருக்­கின்­றது.

நின்று நிதா­னித்­தால்  நன்மை கிடைக்­கும்

காதல் வாழ்வு, இளமை வாழ்வு, இனிமை வாழ்வு இனிக்­கும் போது சுகம்­தான். கசந்­தால் விசந்­தான் என்­றில்­லா­மல் கசப்­புக்­கள், தோல்­வி­கள், ஏமாற்­றங்­கள் எம்மை நாமே சிந்­திக்க, நிதா­னிக்க, இலட்­சி­யப் பாதை­யில் பய­ணிக்க, வாழ்வை வள­மாக்க, வளுக்­க­ளைச் சீர்­செய்ய, வில­கலை நேர்த்­தி­யாக்க, வில்­லங்­கங்­களை விட்­டொ­ழிக்க, ஆக்­கத்து வழி­ச­மைக்­க­வும் அறிவு, அனு­ப­வம், ஆளு­மைக்கு வேலை கொடுப்­போம்.

திடீர் முடி­வு­களை எடுத்­துத் திக்­குத் தெரி­யாத காட்­டில் விடப்­பட்ட நிலைக்கு ஆளா­கா­மல் எம் இயல்­புக்கு ஏற்ற அள­விலே தகு­திக்கு மேற்­ப­டா­மல் பார்த்­துக் கொள்­ளும் போது வாழ்வு எமக்கு வச­மா­கும். வாழ்ந்­தோ­ரின் அனு­ப­வங்­கள் வாழ்க்­கைப் படி­யாய் மாறும். கற்­றோ­ரின் பொன்­மொ­ழி­கள் கணம் அமைக்­கும். பெரி­யோ­ரின் வழி­காட்­டல் பேதமை நீக்­கும்.

ஆக, நல்­ல­தைச் செய்­வ­து­க­டி­ன­மா­னது. தீமையை உடனே செய்து விட­லாம். ஆக்­கு­வது கடி­னம் அழிப்­ப­தற்கு ஒரு வினாடி போதும். குடும்­பங்­கள், உற­வு­கள், பாசங்­கள் எல்­லாம் நீண்ட வாழ்­வுக்­கு­ரி­யன.

எம் இறுதி வரை எம்­மு­டன் கூட வரு­வன. எம்­மைப்­ப­ழித்­தற்­காக, எம்­மைத் திட்­டிய கடின வார்த்­தைப் பிர­யோ­கங்­க­ளுக்­காக, எம்மை பிழை­யாக விளங்­கிக் கொண்­ட­மைக்­காக அந்த சிறு­க­ணப் பொழுதை பெரும் பொழு­தாக எண்­ணிப் பழி­வாங்­க­லில் ஈடு­ப­டா­மல் இவற்­றைத் தூசாக, செல்­லாக்­கா­சாக, ஒரு பொருட்­டாக எண்­ணா­மல் நிதா­னத்­து­டன் பொறுமை காத்­தால் நன்மை பயக்­கும். உயர்­வா­னதை நாடும் போது தாழ்­வா­னது தாண்­டி­வி­டும். ஒன்­றாய் வாழ்­வோம், நன்­றாய் வாழ்­வோம். அதுவே பய­னுள்­ளது.