மற்ற எந்த அசைவ உணவைக் காட்டிலும் புரதம் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது முட்டை தான். ஏனென்றால் முட்டையில் தான் முழுக்க முழுக்க புரதம் நிறைந்திருக்கின்றது என்பது நம் எல்லோருக்குமே தெரியும்

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். அப்போ முட்டை சாப்பிடாதவர்கள் தங்களுக்குத் தேவையான முழுமையாக புரதச் சத்துக்களையும் பெறுவதற்கான வழியே இல்லையா?… என்று கேட்பது புரிகிறது. அப்படி உங்களுக்கு முழுமையான புரதமும் வேண்டுமென்றால் அதற்கு வேறு என்னென்ன உணவுகளையெல்லாம் சாப்பிடலாம் என்று இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

சிலருக்கு முட்டை என்றாலே அலர்ஜியாக இருக்கும். சாப்பிடப் பிடிக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு மிக எளிதாக புரோட்டீன் குறைபாடு உண்டாகும். அப்படி முட்டை சாப்பிடாதவர்களுக்கு புருாட்டீன் குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் முட்டைக்கு இணையாக புரோட்டீன் உள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டியது மிக அவசியம். அப்படி என்னவெல்லாம் சாப்பிட்டால் நமக்குத் தேவையான புரோட்டீன் கிடைக்கும்

வெறும் கால் கப் சோயா பீன்ஸில் மிக அதிக அளவில் 15 கிராம் அளவுக்கு புரோட்டீன் நிறைந்திருக்கிறது. சைவ உணவு மட்டுமே உண்பவர்குளாக இருந்தால் உங்களுக்கு மிகச்சிறந்த புரோட்டீன் இந்த சோயா பீன்ஸில் இருந்தே கிடைத்து விடும். அதனால் அடிக்கடி இதை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனால் இந்த சோயா பீன்ஸில் மசாலா, சுண்டல் போன்று, குருமா ஆகியவற்றைச் செய்து சாப்பிட்டு வரலாம்.

பால் மற்றும் பால் பொருட்களில் அதிக அளவில் புரதங்கள் இருக்கும். அதிலும் சீஸில் புரோட்டீன் அதிக அளவில் இருப்பதோடு மிகவும் சுவையான உணவாகவும் இருக்கும். குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கு சீஸை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொடுத்து வந்தால் அது அவர்களுடைய வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

தயிரில் அதிக அளவில் புரோ-பயோடிக்ஸ் இருப்பது நம் எல்லோருக்குமே தெரிந்தது தான். அதாவது தயிரில் மிக அதிக அளவிலான நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன என்று அர்த்தம். அதேபோல் தயிரில் முட்டையைக் காட்டிலும் அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது. எனவே தினமும் தயிரை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.