இங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.

மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.

இத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதில் எதிர்பார்த்தது போலவே விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக்கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சகால், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா,

இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் ஐசிசி., அனுமதி இல்லாமலேயே வரும் மே 23ம் தேதி வரை பிசிசிசி., மாற்றம் செய்து கொள்ள முடியும்.