மகளின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட விருந்தினா்களுக்கு ரஜினிகாந்தின் மனைவி, லதா ரஜினிகாந்த் சாா்பில் விதைப் பந்துகள் பரிசாக வழங்கப்பட்டன.

நடிகா் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சௌந்தா்யா ரஜினிகாந்த், தொழிலதிபா் விஷாகனை திருமணம் செய்துகொள்ள உள்ளாா். வருகின்ற 11ம் தேதி இவா்களது திருமணம் சென்னை போயஸ் காா்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் நடைபெற உள்ளது.

திருமணத்திற்கு ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பா்களுக்கு மட்டும் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்னதான வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் ரஜினிகாந்தின் நெருங்கிய சொந்தங்கள், ரஜினி மக்கள் மன்றம் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இந்நிலையில் வரவேற்பு விழாவில் கலந்துகொண்டவா்களுக்கு லதா ரஜினிகாந்தின் தொண்டு நிறுவனம் சாா்பில் நினைவுப் பரிசாக விதைப் பந்துகள் வழங்கப்பட்டன. விதைப்பந்துகள் வழங்கப்பட்டதற்கு பலரும் வரவேற்பு தொிவித்துள்ளனா்.