இன்று தீபாவளித் திருநாள். நரகாசுரன் எனும் அசுரனை கண்ண பரமாத்மா சங்காரம் செய்த நாள் என்று கூறப்படுகின்றது.
தீபாவளித் திருநாளின் உள்ளார்ந்தம் உணர்த்தும் பொருள் அற்புதமும் உண்மைத் தத்துவமும் கொண்டது. மனித வாழ்வில் அசுரத்தனங்கள் ஏதோவொரு வகையில் நம்முள் புகுந்து விடுகின்றன.
விளைநிலத்தில் பாதீனியமும் நச்சுச் செடி களும் முளைப்பதுபோல என்று கூறிக்கொள்ளலாம்.
பயிர் செய்கின்ற விவசாயி எங்ஙனம் தன் விளைநிலத்தில் பரந்து கிடக்கும் பாதீனியங் களையும் நஞ்சுத் தாவரங்களையும் அழித்து மானிடத்தின் உணவுக்கான தானியங்களை விளைவிக்கின்றானோ அதுபோல,
மனித மனத்திடை முளைத்திருக்கும் குரோ தங்களும் அசுரத்தனங்களும் ஏமாற்று கின்ற கபடத்தனங்களும் உள்ளொன்றும் வெளி யயான்றுமாகப் பேசுகின்ற கயமைத்தனங் களும் வாழுகின்ற மானிடத்துக்குப் பகையும் தீங்கும் பாவமும் செய்கின்றன.
எனவே ஒவ்வொரு மனிதனும் அவ்வப் போது அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் எனும் அதர்மத்தை வேரறுத்து தெளி ந்த சிந்தனையை; மெய்ஞ்ஞான உணர்வை மனத்தினில் உற்பத்தி செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கான உழவும் விதைப்பும் தான் தெய்வீகமாகும்.
ஆம், தெய்வீகத்தை எங்களுக்குள் ஏற் படுத்தும்போது மேற்குறிப்பிட்ட அசுரத்தனம் எனும் இருள் அகன்று மெய்ஞ்ஞான ஒளி எங் களுக்குள் பிரகாசிக்கின்றது.
ஆக, நரகாசுரனின் வதம் என்ற தீபாவளி உணர்த்துகின்ற உண்மை என்னவெனில், எங் களுக்குள் இருக்கின்ற இருள் அகன்றால் ஒளிப்பிரவாகம் ஏற்படும். அது இந்த உலகம் முழுமையையும் ஒளிமயமாக்கும் என்பதுதான்.
எனவே இன்றைய புனிதமான தீபாவளித் திருநாளில் தமிழ் அரசியல் தரப்புக்களைப் பார்த்து நாம் கேட்பதெல்லாம் இனியேனும் நீங்கள் ஒன்றுபடக்கூடாதா?
இன்னமும் உங்களின் ஆணவ இருள் நீங் காதா; உங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக் களுக்கு நீங்கள் செய்த நம்பிக்கைத் துரோ கம் போதாதா என்பதுதான்.
ஆம், அவர்கள் எங்களை வெட்டி வீழ்த்த எத்தனை திருகுதாளங்கள் போடுகின்றார்கள்.
ஆனால் நீங்களோ எங்களுக்குள் இருக் கின்ற நல்லவர்களையும் கண்டபாட்டில் விமர் சித்து அநியாயம் செய்கிறீர்களே! இப்பிறவிக்கு நீங்கள் செய்வது நியாயமானதா என்று ஒரு கணம் சிந்தியுங்கள்.
இது இறுதிச் சந்தர்ப்பம். தமிழினத்துக் காக ஒன்றுபடுங்கள். நடந்தவற்றை மறந்து, இனியேனும் ஒன்றுபட்டு தமிழினத்தின் வாழ் வுக்காக ஒருமித்துக் குரல் கொடுங்கள்
இதைச் செய்வதில் ஆன்மிகத் தலைவர் கள், தமிழ்ப் புத்திஜீவிகள், பொது அமைப்புக் கள் என முனைப்புக் காட்டினால் நரகாசுரர் கள் அழிவது நிச்சயம். அதனூடு நம் தமிழி னத்தில் ஒளிப்பிரவாகம் ஏற்படுவது சத்தியம்.
இதைச் செய்யத் தவறும் ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் கோடி ரூபாய் உங்களை உடைக்கும். அதுவே உங்களுக்கு விலங்கிடும். மறவாதீர் கள். மாயை இருள் நீக்குங்கள். இறைவன் நிச்சயம் உதவுவான்.