தீபாவளி திருவிழாவின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்வண்ணம் பொதுஇடங்களில் பட்டாசு வெடிக்க ஒதுக்கப்பட்ட நேரம் அல்லாத பிற நேரங்களில் பட்டாசு வெடித்த 85க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பரபரப்பான சாலைகள் மற்றும் கடைத்தெருக்களில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கோவையில் 85 நபர்கள் மீதும் திருநெல்வேலியில் ஆறு நபர்கள் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்

இந்தியா முழுவதும் தீபாவளி திருநாளின்போது பட்டாசு மூலமாக ஏற்படும் காற்றுமாசுபாட்டை குறைப்பதற்காக ஒவ்வொரு மாநில அரசாங்கமும் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அறிவித்துள்ளன. அதன்படி, தமிழகத்தில் காலை 6முதல் 7வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8வரை பட்டாசு வெடிக்கலாம் என அரசாங்கம்அறிவித்தது.