போர் சூழல் முடிவுற்று தசாப்த காலமாகப்போகிறது. இன்றைய காலகட்டத்தில் நாட்டில் பல் வேறு துறையில் எம் இளைஞர்கள் தமது திறைமையை நிரூபித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில்  பாரதி மைந்தனின் ‘துளிர் விடும் கனவுகள்’ எனும் தலைப்பில் கவிதை புத்தக வெளியீடு இடம்பெற உள்ளது. 

 இவ் வெளியீட்டு நிகழ்வானது எதிர்வரும் 11.11.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்1:30 மணிக்கு பாரதிதாசன் சனசமூக நிலைய தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. 

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா அல் இன்பால் மகா வித்தியாலயத்தின் ஆசியர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சி பணிப்பாளர் ரி.எஸ்.முகுந்தன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் குலசிங்கம் விக்ரர் ஜெயசிங்கம்,புதுக்குடியிருப்பு இளைஞர் சேவை அதிகாரி அ.விஜிதரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

தாய் தொலைக்காட்சியின் ஊடக அனுசரனையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பாரதிதாசன் சனசமூக நிலையம் வெளியீடு செய்யும் பாரதி மைந்தனின் “துளிர்விடும் கனவுகள்” கவிதை நூல் வெளியீடானது பாரதிதாசன் சனசமூக நிலைய முன்றலில் நடைபெறவுள்ளது.