தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதியின புதிய 2 பகுதிகள் இன்று (07) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாத்தறை முதல் மத்தல வரையான பகுதியும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான சுமார் 40 கிலோ மீற்றர் கொண்ட பகுதியும் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதல் இந்த வீதிகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடவத்தையில் இருந்து கெரவலபிட்டிய வரை அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட பாதையும் இன்று (07) மாலை திறக்கப்பட உள்ளதாக நிஹால் சூரியராச்சி கூறியுள்ளார்.