தேசிய தௌஹீத் ஜாமாத் அமைப்பின் இரண்டு உறுப்பினர்கள் திருகோணமலை – ஹொரவபொத்தான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரவபொத்தான பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நூர் மொஹமட் அத்துர் மற்றும் அப்துல் ஜமால் நிஷாம் ஆகிய 56 மற்றும் 48 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பயங்கரவாதியான சஹ்ரான் ஹசிமுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை கெப்பத்திகொல்லாவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது