விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அடுத்த வாரம் யாழ்ப்பாணம் வருகிறார். வடமாகாண மரநடுகை மாதத்தில் கலந்து கொள்ளவே திருமாவளவன் யாழ்ப்பாணம் வருகிறார்.

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு வரும் 10ம் திகதி, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மரநடுகையும், மலர் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும், சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் கலந்து கொள்கிறார்.

இந்த மலர்க்கண்காட்சி 10ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை தினமும் காலை 9 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை நடைபெறும்.