இலங்கை உயர் நடுத்தர வருமானத்தை பெரும் நாடாக மாறியுள்ளது. இன்று எமது ஆள்வீத வருமானம் 4000 அமெரிக்க டொலர்களாக இருக்கின்றது. ஆகவே தொடர்ந்து இந்த நிலையில் இருந்துவிட கூடாது. உயர் பொருளாதார வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வழிவகைகளை வகுத்து கொள்ள வேண்டும்.

உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சர்வதேச சந்தையுடன் போட்டியிடக் கூடியவகை வெளிநாட்டு வருமானம், ஏற்றுமதி பொருளதாரம் என்பவற்றை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா -கொரியா தேசிய தொழில் பயிற்சி நிறுவனத்தின் திறப்பு விழா இன்று பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

அங்கு தொடரந்து பிரதமர் கூறுகையில் ;

இன்று எமது நாடு உயர் நடுத்தர பொருளதார மட்டத்தை அடைந்துள்ளது. உயர் நடுத்தர வருமானம் தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது. அதற்கமைய ஆள்வீத வருமானம் 4000 டொலர்களாக அதிகரித்துள்ளது. இன்று உயர் நடுத்தர வருமானம் பெரும் நாடு என்ற நிலையை அடைந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

அதேபோன்று பொருளாதார ரீதியாக நாம் எதிர்க்கொண்டுள்ள சவால்களையும் அறிந்துக்கொள்ள வேண்டும். ஒரே நிலையில் இருக்க முடியாது. உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னேறி ச்செல்ல வேண்டும். அதை நோக்கி பயணிக்காவிட்டால் பொருளாதார ரீதியாக ஒரு இடத்தில் நெருக்கடியை சந்திக்க வேண்டி ஏற்படும்.

நாட்டின் அதிக பொருளாதார வருமானத்துக்காக எவ்வாறு எமது வெளிநாட்டு பொருளாதார வருமானத்தை ஏற்படுத்தி கொள்ளுதல், கடன்களை செலுத்துவதற்கு தேவையான நிதியை எவ்வாறு சேமிப்பது, எவ்வாறு கடனை மீள செலுத்துவது போன்ற பிரச்சினைகளுக்கு பதில் தேட வேண்டும். இதுவரையில் பாரிய கடனை பெற்றுக்கொண்டுள்ளோம். அந்த கடன் தொகைகளை விரைவாக மீள்செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

என்றாவது ஒருநாள் நாம் பெற்றுள்ள மொத்த கடனையும் மீள செலுத்தி கடன் சுமையில் இருந்து மீண்டு வர வேண்டும். அதற்கு சரியான காலமே தற்போது உருவாகியுள்ளது. கடன் சுமையில் இருந்து மீண்டு வரவேண்டுமாக இருந்தால் எமது வெளிநாட்டு வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இன்று எமது ஏற்றுமதி பொருளாதாரத்தி அளவை விட இறக்குமதி பொருளாதாரத்தின் அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே இறக்குமதி பொருளதாரத்தை விட ஏற்றுமதி பொருளாதாரத்தினூடான வருமானம் அதிகரிக்கும் போதே கடன் சுமையில் இருந்து மீண்டு வருவோம்.

ஜி.எஸ்.பி வரிச்சலுகையினூடாக எமது வருமானத்தை இன்னும் பெற்றுக்கொள்ள கூடியதாக இக்கும். அவ்வாறு இருந்தால் மாத்திரமே உலக சந்தையில் எமது இடத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே எமது சவால். இன்று தேர்தல் குறித்தும் நாட்டை மீட்டெடுக்குமாறும் கூச்சலிடுகிறார்கள். நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் எமது கடன்களை மீலச் செலுத்த வேண்டும். அதனூடாக எமது அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்றார்.