இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை பறக்கவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய சுதந்திர தின உரையில் தம்முடைய அரசு எடுத்த முக்கிய முடிவுகள், தேசம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனைகளுக்கு தாம் முன்வைக்கும் தீர்வுகள் ஆகியவை குறித்து விளக்கியிருக்கிறார். அவர் முன்வைக்கும் திட்டங்கள், தீர்வுகள் எத்தகையவை?

பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய உரையில் விஷயங்களில் நான்கைந்து, மிக முக்கியமான விஷயங்களாகப் பார்க்கப்பட்டன.

முதலாவதாக, பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற ஒரு பதவியை தமது அரசு உருவாக்கும் என்று தமது சுதந்திர தின உரையில் தெரிவித்தார் பிரதமர் மோடி.

அடுத்ததாக, ஒரு நாடு, ஒரு வரி என்ற கனவுக்கு ஜி.எஸ்.டி. உயிர் கொடுத்தது என்று கூறிய மோடி, நாடு முழுவதற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது பற்றி இந்தியா தற்போது பேசிவருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், செல்வங்களை உருவாக்குவது தேசிய சேவை. அதைச் செய்வோரை சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது என்றும் வரும் ஐந்தாண்டுகளில் வளர்ச்சிக்காக 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.