அரசு விழா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வந்திருந்தார்.

அரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, திருப்பூரில் அமையவுள்ள 470 படுக்கை வசதிகள் கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை, திருச்சி விமான நிலையத்தின் புதிய கட்டடம், சென்னை டி.எம்.எஸ் – வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை காணொளி மூலம் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அரசு விழா என்ற போதிலும்,அரசு விழா என்ற போதிலும், மோதி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மரபின்படி விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், விழாவின் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் நரேந்திர மோதி கலந்துகொண்டபோதும், அந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படாதது விமர்சனத்துக்கு உள்ளானது.

கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மரபின்படி விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், விழாவின் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை.