இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கை 09.07.1995 ஆம் திகதியன்று சந்திரிகா ஆட்சிகாலத்தில் இலங்கை விமானப்படையினால் சென்.பீற்றர்ஸ் தேவாலையம் மற்றும் முருக மூர்த்தி ஆலயம் என்பவற்றின் மீது மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 147 பொதுமக்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாராநாயக்காவின் வழிநடத்தலில் 1995.07.09 ஆம்திகதி இதே நாளில் மேற்படித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இராணுவ முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து சென்ற மக்கள் தேவாலையங்கள், சைவ ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளில் தஞ்சம் புகுந்திருந்தனர் .

Image may contain: outdoor

Image may contain: one or more people, outdoor and food

Image may contain: outdoor

Image may contain: text

அப்போதைய சந்திரிக்காவின் அரசாங்கம் மக்கள் மத்தியில் விமானத் தாக்குதல் மற்றும் செல் தாக்குதல்களை தொடுந்திருந்தது.

இதன் அங்கமாகவே 1995அன்று மாலை 5.45 மணியளவில் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலையம், முரக மூர்த்தி ஆலயம் என்பவற்றின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இச் சம்பவத்தில் 147 பேர் கொல்லப்பட்டதுடன், 360ற்கும் மேற்பட்டவர்கள் காயங்களுக்கு உள்ளாக்கப்டடனர்.

இத்தாக்குதல் சம்பவத்தின் நினைவாக வீதியிலும், நவாலி புனித பேதுறுவான சின்னங்கள் உருவாக்கப்படுள்ளன.

147 அப்பாவிக் குடிமக்களை கணப்பொழுதில் பலியெடுத்த நவாலி தேவாலயம் மீதான விமானத் தாக்குதல் ஆகும்.

தமிழர் தாயக வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத இரத்தக்கறை படிந்த கோரமான கொடூரநாள் 09.07.1995 ஆண்டு ஆகும்.

அந்த நவாலி படுகொலையையின் நினைவை ஒரு கணம் மீண்டும் மீட்டுப்பார்க்கின்றோம்.

இந்த கொடுமையான பலியெடுப்பு சர்வதேச சமூகத்தையே மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளாக்கியதுடன் மக்களை சொல்லெணாத்துயரத்திற்கு இட்டுச் சென்றது.

கடந்த 09.07.1995 தமிழர் வரலாற்றில் இரத்த ஆறு ஓடிய ஓரு கோரமான கொடிய நாள். அன்றுதான் நவாலி சென்.பீற்றர்ஸ் மற்றும் மூருக மூர்த்தி ஆலயம் (சின்னக்கதிர்கமம்) அழிந்து அப்பாவியாக இடம் பெயர்ந்து கொண்டிருந்த மக்களை காவுகொண்ட நாள்.

முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்காவின் பணிப்புரையின் பேரில் வலிகாம் பகுதியில் ஷெல் , ரொக்கட் தாக்குதலில் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில், விமானப்படையினால் ஆடப்பட்ட ஓர் இனப்படுகொலையாகும்.

வரலாற்றில் இந்த இரத்தக்கறை படிந்த நாட்களை, நிகழ்வுகளை மறக்க முடியாது. தமிழினம் மறக்காது என்று அன்றைய நிகழ்வையொட்டி லண்டன் பி.பி.சி. செய்தி நிறுவனம் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

அலுவலரான பிலிப்புப்பிள்ளை கபிரியேல்பிள்ளை அவர்களும் ஸ்தலத்தில் பலியான அரச சேவையாளர்கள், எவராலும் இவர்களை மறக்கமுடியாது.

அன்றைய தினம் மக்கள் தொண்டுப்பணியில் ஈடுபட்டு உணவு, குடிநீர் வழங்கிக் கொண்டிருந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில் துடி துடித்து உயிர் இழந்ததை மறக்கமுடியது.

09ஆம் திகதியான ஜூலை நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும்; நவாலி சின்னக்கதிர்காமம் முருக ஆலயத்திலும் வருடா வருடம் நினைவுகூரும் வழிபாடும் நடாத்தப்பட்டு வருகின்றது.

மேற்படி 1995ஆம் ஆண்டு நவாலி இணப்படுகொலை தொடர்பாக நவாலி வடக்கு சோமசுந்தர புலவர் வீதியிலும், நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் படுகொலைச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ன.