தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் அந்த நாயகி அவரது அடுத்த படம் குறித்து வருத்தத்தில் இருக்கிறாராம்.

மூக்கு நீளமான வாரிசு நடிகருடன் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த வாரிசு நடிகை, தற்போது முன்னணி நாயகியாக வலம் வருகிறாராம். அந்த நடிகை சமீபத்தில் ஒரு நடிகையின் வாழ்க்கை படத்தில் நடித்தாராம். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதாம். நாயகிக்கும் பாராட்டுக்கள் குவிகிறதாம்.
இதனால் செம குஷியில் இருக்கும் அந்த நாயகி, தற்போது ஜோசப் நாயகனுடன் ஒரு படத்திலும், கடவுளின் மறுபெயர் கொண்ட படத்தின் இரண்டாவது பாகத்திலும், கோழி படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகிறாராம்.
இவ்வாறாக பெரிய நாயகர்களுடன் நடித்து வரும் அந்த நாயகிக்கு ஒரு சிறய வருத்தம் இருக்கிறதாம். நாயகி நடித்து வரும் கோழி படத்தில் மற்றொரு நாயகியும் இருக்கிறாராம்.
படத்தில் தன்னை விட அந்த நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், தனக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் நாயகி வருத்தப்படுவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.