லோக்சபா தேர்தல் தேதிக்காக காத்திருந்த பிசிசிஐ, நாளை ஐபிஎல் போட்டிக்கான முழு ஆட்டவணையை அறிவிக்கிறது. ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 11 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 12வது ஐபிஎல் போட்டி வருகிற 23ம் தேதி தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் சாம்பியனாக உள்ளது. அதனால் அந்த அணியின் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது

23ம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஐபிஎல் ஆட்சி மன்ற குழு ஏப்ரல் 5ம் தேதி வரை இரண்டு வார காலத்துக்கான போட்டி அட்டவணையை மட்டுமே வெளியிட்டது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து, அதற்கு ஏற்றபடி மாற்றம் செய்து ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை நாளை அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதற்கான நடவடிக்கைகளில் பிசிசிஐ இறங்கி இருக்கிறது.

பொதுவாக ஐபிஎல் போட்டிகள் உள்ளூர், வெளியூர் என்ற கணக்கில் தலா 7 ஆட்டம் நடத்தப்படும். லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் பாதுகாப்புக்காக இதில் மாற்றம் செய்யப்படும். ஒரே இடத்தில் பெரும்பாலான போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.