நடிகர் சங்கத் தேர்தல் பரப்பரப்பான நிலையை எட்டியுள்ள நிலையில் பாண்டவர் அணியும் சங்கரதாஸ் அணியும் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர்.

இரு அணியினரும் தங்களுக்கு ஆதரவு வேண்டி மூத்த நடிகர்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரலட்சுமி விஷாலை தாக்கி டீவிட் போட்டுள்ளார் அது மிகப்பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. விஷால் சரத்குமாருக்கு எதிராக செயல்பட்டு வந்தாலும் வரலட்சுமி விஷால் உடன் நட்பாகவே இருந்தார். இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தலுக்காக பாண்டவர் அணி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் விஷால் சரத்குமார், ராதாரவியை தாக்கி பேசியுள்ளனர் இதனால் கோபமடைந்தே வரலட்சுமி விஷாலுக்கு எதிராக பொங்கியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது.
அன்புக்குரிய விஷால் சமீபத்தில் வெளியான வீடியோவைப் பார்த்தேன். நீங்கள் எவ்வளவு கீழிறங்கி விட்டீர்கள் என்று தெரிகிறது. உங்கள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது.
எந்த வித ஆதாரமும் இல்லாமல் என் அப்பாவை குற்றம் சொல்வது சரியல்ல. இத்தனைக்கும் நீங்கள் நீதீதான் எல்லாமே என்று சொல்வீர்கள். என் தந்தை குற்றவாளியென்றால் அவருக்கு இந்நேரம் தண்டனை கிடைத்திருக்கும். இந்த முறை நான் உங்களை தவறு சொல்ல மாட்டேன். நீங்கள் வளர்ந்த விதமே அப்படித்தான். நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்று தெரிகிறது. உங்களது இரட்டை வேடமும் பொய்களும் எனக்கு நன்றாக தெரியும். என்று கூறியுள்ளார்.

வரலட்சுமி இப்படி கடுமையாக விஷாலைத் தாக்கியிருப்பது சினிமா உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.