சகல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க எரிபொருள் விலைச்சூத்திரம் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் விலைச் சூத்திரத்திற்கு அப்பால் உலக எரிபொருள் நெருக்கடியும் அமெரிக்க டொலர் நெருக்கடியும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் நாளாந்தம் எரிபொருள் விலை மாற்றப்படுகிறது. உலக சந்தையில் எரிபொருள் விலை குறையுமானால் அதன் அனுகூலத்தை மக்களுக்கு வழங்கத் தயார் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.