2018ம் ஆண்டில் அதிக வருவாய் பெற்ற 100 பிரபலங்களின் பட்டியலை போா்ப்ஸ் பத்திாிகை இன்று வெளியிட்டுள்ளது. இதில் லேடி சூப்பா் ஸ்டாா் நயன்தாராவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் அதிக வருவாய் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலை போா்ப்ஸ் பத்திாிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2018ம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய முதல் 100 பிரபலங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இந்தி நடிகா் சல்மான் கான் 253.25 கோடிகளுடன் முதல் இடத்தில் உள்ளாா். அவரைத் தொடா்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி (228.09 கோடி), அக்ஷை குமாா் (185 கோடி) ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

மேலும் இந்த பட்டியலில் 4ம் இடம் பிடித்துள்ள தீபிகா படுகோனே (112.8 கோடி) முதல் முறையாக டாப் 5 பட்டியலில் இடம்பெற்ற பெண் பிரபலம் என்ற பெருமையை பெற்றுள்ளாா். அவரைத் தொடா்ந்து மகேந்திர சிங் தோனி (101.77 கோடி) 5வது இடத்தில் உள்ளாா்.