லண்டனில் Bureaux de change  மற்றும் நாணய பரிமாற்ற வணிக நிறுவனங்கள் பொலிஸாரால் சோதனை செய்யப்படுகின்றன.

போதைப்பொருள், பண மோசடி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவாரத்திற்கு இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்படி சோதனை நடவடிக்கையின் முதல்நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) லண்டனில் 12 வணிக நிறுவனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லண்டனில் சுமார் 9,000 பணப்பரிமாற்ற நிலையங்கள் உள்ளன. அவற்றுக்கிடையில் வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான பில்லியன் பவுண்ட்ஸ்கள் கையாளப்படுகின்றன. இது இங்கிலாந்து சந்தையில் ஐந்தில் ஒரு பகுதியாகும்.

இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை சட்டபூர்வமாக இயங்குவதாகவும் குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் ஒப்பந்தங்களின் மூலம் பணம் பெற்றுக் கொள்வது அல்லது ஹோல்டோல்களைப் பெற்றுக கொள்வது என சட்டவிரோத நடவடிக்கையில் அடங்குகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பில்லியன் டொலர் இங்கிலாந்து ஊடாக பணச்சலவை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேற்படி தகவல்களின் அடிப்படையில், மெட்ரோ பொலிஸ், எச்.எம். வருவாய் மற்றும் சுங்கத்துறை மற்றும் நிதி சேவைகள் கண்காணிப்பு அமைப்பின் கூட்டு நடவடிக்கையாக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.