90 எம்.எல். பட டிரெய்லருக்கு எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள் என நடிகை ஓவியா ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

பொதுமக்களிடம் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்த பிரபல நடிகை ஓவியா ‘90 எம்.எல்’ படத்தின் டீசர் மூலம் அவற்றை இழந்துவிட்டதாக கருத்து உருவாகி வருகிறது. ‘களவாணி’ படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கியவர் ஓவியா. அதையடுத்து பல படங்களில் நடித்தார். இருந்தாலும் பொதுமக்களிடம் பெயர் வாங்க முடியவில்லை.

இந்நிலையில் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு லட்சக்கணக்கானவர்களின் அன்பு கிடைத்தது. ஏராளமான ரசிகர்களும் உருவாகினார்கள்.

தற்போது அவர் நடித்து வரும் படம் ‘90 எம்.எல்.. நேற்று இந்தப் படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் பேசும் வசனங்கள் நடிப்பு ஆகியன பலத்த எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறது. படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பொதுமக்கள் அனைவரும் ஓவியா மீது நல்ல மதிப்பும மரியாதையும் வைத்திருந்தனர். ஆனால், அவர் அதையெல்லாம் பொருட்படுத்தால் இதுபோன்ற படத்தில் நடித்து பொதுமக்கள் மனதை ஓவியா வருத்தமடையச் செய்துவிட்டதாக கருத்து நிலவுகிறது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ஓவியா, ‘பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப்படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். டிரெய்லரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.