கிளிநொச்சி போக்குவரத்து பொலிசாருடன் இணைந்து பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகன்கள் தொடர்பில் விசேட சோதனை ஒன்றை இன்று (10)மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சோதனை இன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது,

பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் இதன்போது சோதனைக்குட்படுத்தப்பட்டன.

கிளிநொச்சி போக்குவரத்து பொலிசாரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மோட்டர் போக்குவரத்து ஆணையாளர் ஜி எச் டி கே விஜேசேகரவினால் குறித்த வாகனங்கள் இன்று விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டன.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் நோக்குடன் குறித்த விசேட சோதனை இன்று மெற்கொள்ளப்பட்டது,

இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் பிள்ளைகளை ஏற்றி செல்லுதல் தொடர்பில் பொலிசார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர்.