மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று படம் நிதி பற்றாகுறையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் இல்லை.

தெலுங்கில் சமீபத்தில் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்திருக்கும் என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் என்.டி.ஆர். வேடத்தில் பாலகிருஷ்ணா நடித்திருந்தார். இந்தப் படம் இன்று வெளியாகி பெரிய வெற்றியை குவித்திருக்கிறது. படம் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்.

ஆனால் இந்தப் படத்திற்கு முன்பாகவே திட்டமிடப்பட்டு எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று படத்தை தமிழில் எடுத்தார்கள். காமராஜ் படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்கினார். ஆனால் படம் பாதி வளர்ந்த நிலையில் படத்தை முதல்வரும் துணை முதல்வரும் எடுத்த வரைக்கும் பார்க்கலாம் என்று ஆசைப்பட்டிருக்கிறார்கள். படத்தை அவர்களுக்கும் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர். என்ன நடந்ததோ தெரியவில்லை. அதன் பிறகு எம்.ஜி.ஆர். படத்தின் படப்பிடிப்பு அப்படியே நின்று போனது.
இது ஆளுங்கட்சியிலிருந்து ஏதேனும் அழுத்தம் தரப்பட்டு நின்று போனதா என்பது தெரியவில்லை. ஆனால் இயக்குனர் பாலகிருஷ்ணனின் காமராஜ் படமே நான்கு ஆண்டுகள் எடுக்கப்பட்டுதான் வெளியிடப்பட்டது. குறைந்த முதலீட்டில் உருவாகும் எம்.ஜி.ஆர். படத்தை நினைத்தபோது எடுக்க பொருளாதாரம் போதவில்லை என்று கூறப்படுகிறது.

தான் வாழ்ந்தவரை நாட்டுக்கே அள்ளிக் கொடுத்த வள்ளலின் படம் எடுப்பதற்கு நிதி போதவில்லை என்பது கண்டெயினர்களில் பணத்தைக் கடத்தும் எம்.ஜி.ஆர். பெயர் சொல்லிகளுக்கு தெரியாமல் போனது பரிதாபம் தான்.