பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவைகள் நீதிமன்றின் அனுமதியோடு அகற்றப்படவேண்டும் என்று யாழ்ப்பாணப் பொலிஸ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வர்ணஜெயசுந்தர தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள வீதிப்போக்குவரத்து நடைமுறை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய கேட்போர்கூடத்தில் வர்ணஜெயசுந்தர தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் 5 இடங்களில் பொதுமக்களால் சட்டவிரோதமாகத் தொடருந்துக் கடவைகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றை உடனடியாக அகற்றுவதற்கு, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து, நீதிமன்றின் உத்தரவுடன் குறித்த 5 சட்டவிரோத கடவைகளையும் அகற்றுமாறு தனக்குக் கீழ் நிலையிலுள்ள பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.