இலங்கை மீது தற்பொழுது இருக்கின்ற பாதுகாப்பு எச்சரிக்கையை தளர்த்துமாறு வெளிநாட்டு தூதுவர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு தூதுவர்களை இன்று அலரி மாளிகையில் சந்தித்து பேசும்போது அவர் மேற்கண்ட வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

“ நாட்டின் நிலைமையை நாங்கள் சீர்படுத்தியுள்ளோம். பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்.அதேசமயம் இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தளர்த்துங்கள்”என அவர் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டார்.