ஹுவாய் பி ஸ்மார்ட் பிளஸ் (2019) சாதனம் கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவந்துள்ளது, பின்பு இந்த சாதனத்தின் பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஹுவாய் பி ஸ்மார்ட் பிளஸ் (2019) ஸ்மார்ட்போன் பொதுவாக 6.21-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் கிரிண் 710 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுவாய் பி ஸ்மார்ட் பிளஸ் (2019) ஸ்மார்ட்போனில் 24எம்பி + 2எம்பி + 8எம்பி ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள், எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் அடக்கம்.

இக்கருவியில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி அடக்கம், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. குறிப்பாக கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சென்சார் ஆதரவுகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஹுவாய் பி ஸ்மார்ட் பிளஸ் (2019) சாதனத்தில் 3,400எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.