பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்க உள்ளது. போட்டிகள் துவங்க இன்னும் 2 நாட்களே உள்ளன. இந்த முறை யாருக்கு சாம்பியன் பட்டம் கிடைக்கும் என்பதில் பலத்த போட்டி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிபா உலகக் கோப்பை போட்டிகள் இதுவரை 20 முறை நடந்துள்ளன. இதில் 8 அணிகள் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. 21வது பிபா உலகக் கோப்பை ரஷ்யாவில் வரும் 14ம் தேதி துவங்கி, அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடக்க உள்ளன. இதில் பங்கேற்கும் 32 அணிகளில் யார் சாம்பியனாவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
1930ல் துவங்கி இதுவரை 20 முறை உலகக் கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. அதில் 12 நாடுகள் மட்டுமே பைனல்ஸ் நுழைந்துள்ளன. ஆனால், 8 நாடுகள் மட்டுமே உலகக் கோப்பையை மாறி மாறி வென்றுள்ளன. இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பையிலும் பங்கேற்றுள்ள ஒரே நாடான பிரேசில், ஐந்து முறை கோப்பையை வென்று, அதிக முறை கோப்பையை வென்ற சாதனையை தக்க வைத்துள்ளது.

1930 – உருகுவே

1934 – இத்தாலி

1938 – இத்தாலி

1950 – உருகுவே

1954 – மேற்கு ஜெர்மனி

1958 – பிரேசில்

1962 – பிரேசில்

1966 – இங்கிலாந்து

1970 – பிரேசில்

1974 – மேற்கு ஜெர்மனி

1978 – அர்ஜென்டீனா

1982 – இத்தாலி

1986 – அர்ஜென்டீனா

1990 – மேற்கு ஜெர்மனி

1994 – பிரேசில்

1998 – பிரான்ஸ்

2002 – பிரேசில்

2006 – இத்தாலி

2010 – ஸ்பெயின்

2014 – ஜெர்மனி

2018 – ?