ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

சற்றும் எதிர்பார்க்காத இந்த தொடரை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அடுத்த மாதம் ஆஸி. அணி இந்தியா வரவுள்ளது.

2019 பிப்ரவரியில் இந்த சிறிய தொடர் துவங்க உள்ளது. 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 24 தொடங்கி, மார்ச் 13 அன்று நிறைவு பெறுகிறது இந்த புதிய இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்.

இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24 (பெங்களூரு) மற்றும் பிப்ரவரி 27 (விசாகப்பட்டினம்) நடைபெற உள்ளது. டி20 போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.