இங்கிலாந்து அரச திணைக்களங்கள் பரவலாக்கத்தின் சிறந்த நலன்களுக்காக செயற்படுவதை உறுதி செய்யும் வகையில் மறு ஆய்வு செய்வதற்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே முன்வந்துள்ளார்.

இந்த வாரம் ஸ்கொட்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் தெரேசா மே மேற்படி அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

குறித்த மறு ஆய்வு நடவடிக்கைகளுக்கு ஸ்கொட்லாந்து முன்னாள் அமைச்சர் லோட் டன்லொப் தலைமை தாங்கவுள்ளார்.

அதன்படி அரசாங்க திணைக்களங்கள் உட்பட இங்கிலாந்து அரசாங்கத்தின் அனைத்து கட்டமைப்புக்களும் அதிகார பரவலாக்க பணிகளை உறுதி செய்வதற்காக ஒத்துழைப்பு வழங்குகின்றன என்பதை உறுதிசெய்யப்படும்.

இந்த நடவடிக்கையானது தற்போது அவசியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. குறிப்பாக இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னர் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நாடு வெளியேற்றப்பட்டால் ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் குறித்து இரண்டாவது வாக்கெடுப்பு நடத்த விரும்புவதாக ஸ்காட்லாந்து முதலமைச்சர் கூறியுள்ளார்.

அதேவேளை எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாத பிரெக்சிட் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று ஸ்கொட்லாந்து செயலாளர் டேவிட் முண்டெல் எச்சரித்துள்ளார்.

ஜெர்மி ஹன்ட் மற்றும் பொரிஸ் ஜோன்சன் இருவரும் தொழிற்சங்கத்தை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ள அதேவேளை ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற அவர்கள் மறுக்கவில்லை.

இவ்வாறான ஒரு நிலையில் பிரதமர் தெரேசா மே பதவியில் இருந்த காலத்தில் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்துக்கு பூஜ்ஜிய மரியாதை காட்டியுள்ளமை ஒரு அவநம்பிக்கையான செயல் என்று ஸ்கொட்லாந்து பிரதமர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஸ்கொட்லாந்தின் அரசாங்கங்கள் ஸ்கொட்லாந்தின் சிறந்த நலன்களுக்காக செயல்படுவதை உறுதிசெய்வதோடு இங்கிலாந்து அரசாங்கத்தின் பணிகளையும் உறுதி செய்ய பிரதமர் தெரேசா மே நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.