மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ள மைதானம் ‘அடல் பிஹாரி வாஜ்பாய் திடல்’ என பெயர் மாற்றம் என்று பாஜக மாநில செயலாளர் ஆர். ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வரும் 27ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, மதுரையிலிருந்து தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். இதற்காக மதுரை ரிங்க்ரோடு பகுதியில் ஆர். ஸ்ரீனிவாசன் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதியை சேர்ந்த பாஜக தொண்டர்கள் பிரதமர் உரை நிகழ்த்தும் கூட்டத்திற்கு வருவார்கள். மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கான வரவேற்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

மதுரைக்கு வரும் 27ம் தேதி வரும் மோடி, அம்மா திடலை தாண்டி 5 கி.மீ தூரமுள்ள மைதானத்தில் உரை நிகழ்த்துகிறார். அந்த மைதானம் பிறகு ‘அடல் பிஹாரி வாஜ்பாய் திடல்’ என பெயர் பெறவுள்ளது என ஆர். ஸ்ரீனிவாசன் கூறினார்.