நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற அமர்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்திருந்தார்.

இதன்போது தொழில் மற்றும் நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பிரதமர் ரணிலின் கவனத்திற்கு கொண்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர். இது குறித்து பல கேள்விக் கனைகளையும் தொடுத்துள்ளார்.

இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறுகையில்,

பிரதம அமைச்சரே பட்டதாரிகளுக்கு புள்ளி அடிப்படை அல்லாமல் ஆண்டு அடிப்படையில் அவர்களுக்கு உரிய நியமனம் வழங்க வேண்டும்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் குறிப்பிட்ட திணைக்களத்தில் சாரதிகள், லேபர்மார், அலுவலக உதவியாளர்கள், தற்காலிகமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு காலமும் வேலை செய்தவர்கள் எங்களிடம் வருகிறார்கள் “இவ்வளவு காலமும் கெசுவலாக வேலை செய்தோம். தற்போது நிரந்தர நியமனமாக காலியிலிருந்து வருகிறார்கள், குளியாப்பிட்டியிலிருந்து வருகிறார்கள், நாங்கள் என்ன செய்வது” என்று என்னிடம் கேட்கிறார்கள்.

இதற்கு எங்களிடம் பதிலில்லை. ஆகவே பிரதம அமைச்சரே அதை தயவு செய்து வடக்கு, கிழக்கில் அந்தந்த மாவட்டத்தில் இருக்கின்றவர்களுக்கு கொடுங்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.