ஏப்ரல் 28, 2017 அன்று அதிகாலை நேரத்தில், ஜப்பானின் கியோட்டோ நகரின் வான்பரப்பை கிழித்துக்கொண்டு ஒரு சிறிய நெருப்புபந்து பயணித்தது. இப்போது அதுதொடர்பாக ​​சோனோட்டாக்கோ விண்கல் சர்வே நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளுக்கு நன்றி கூறியே ஆகவேண்டும். இத்தரவுகளின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் அந்த நெருப்புபந்து பூமிக்கு அச்சுறத்துதலாக இருக்கும் மிகப்பெரிய விண்கல்லின் ஒரு துண்டு தான் என்று தீர்மானித்துள்ளனர்.

ஜப்பானின் மீது எரிந்த நிலையில் பயணித்த அந்த விண்கல் மிகவும் சிறியது. சோனோட்டாக்கோ தரவுகளை ஆராய்ந்தபோது, ஆராய்ச்சியாளர்கள் இந்த பொருள் வளிமண்டலத்தில் சுமார் 1 அவுன்ஸ் (29 கிராம்) நிறை கொண்டுள்ளதாகவும், 1 அங்குலம் (2.7 சென்டிமீட்டர்) அகலமுடையதாகவும் இருப்பதாக தீர்மானித்தனர். ஆகையால் இது யாருக்கும் அச்சுறுத்தலாக இல்லை. ஆனால் இது போன்ற சிறிய விண்கற்கள் சுவாரஸ்யமானவை. ஏனென்றால் அவற்றை உருவாக்கிய பெரிய பொருள்களின் தரவுகளை வழங்க முடியும். இந்த விஷயத்தில், ஆராய்ச்சியாளர்கள் சிறிய பாறையை வைத்து அதன் விண்கல்லை கண்டுபிடித்துள்ளனர். அது 2003 YT1 என்ற பெயரில் அறியப்படுகிறது .

சுமார் 1.2 மைல் (2 கிலோமீட்டர்) அகலமுள்ள உள்ள ஒரு பெரிய பாறையால் ஆன பைனரி விண்கல்லான இந்த 2003 YT1-ஐ, 690 அடி (210 மீட்டர்) நீளமுள்ள ஒரு சிறிய சிறுகோள் சுற்றுப்பாதையில் சுற்றுவருகிறது . 2003 இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பைனரி விண்கல், அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில் பூமியை ஒரு கட்டத்தில் தாக்குவதற்கு 6% வாய்ப்பு உள்ளது. இது நமது வாழ்நாளில் யாரையும் தாக்குவதற்கு வாய்ப்பில்லை என்றாலும், ஆராய்ச்சியாளர்கள் இதை “தீவிர அபாயகரமான பொருள்” என்று வகைபடுத்தியுள்ளனர்.