பிரான்ஸ் பரீசில் நேற்று புதன்கிழமை (நவம்பர் 21) மெற்றோ தொடரூந்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆறாம் இலக்கம் Glacière மெற்றோ தரிப்பிடத்தில் வைத்து இந்த குழந்தை பிறந்துள்ளது. குறித்த தொடரூந்துக்குள் மருத்துவர் ஒருவர் இருந்ததாகவும் குறித்த பெண் பிரசவிக்க அவர் உதவியதாகவும் அறியபடுகிறது.

இந்த சம்பவத்தினால் 22:35 இல் இருந்து 23:10 வரையான நேரத்துக்குள் Raspail மற்றும் Place d’Italie ஆகிய இரு நிலையங்களுக்கிடையே போக்குவரத்து தடைப்பட்டது.

குழந்தை தனது 25 ஆவது வயது வரை இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என பரீஸ் போக்குவரத்து சபை (Ratp) அறிவித்துள்ளது.