துபாயிலுள்ள தனது கணவரை விட்டு சென்ற இளவரசி ஹயா லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், தனது கணவரை விட்டு பிரிந்து சென்ற பின்னர் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது,

குதிரை பந்தய திடலின் உரிமையாளரும், பில்லினியருமான 69 வயதான ஷேக் முகமது, பெயர் குறிப்பிடாத பெண்ணொருவர் “தேச துரோசம் இழைத்து விட்டதாகவும், காட்டிக் கொடுத்துவிட்டதாகவும்” குற்றஞ்சாட்டி கோபத்துடன் இன்ஸ்டாகிராமில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஷேக் முகமது பிரிட்டனிலுள்ள அஸ்கோட்டில் எல்சபெத் அரசியோடு அடிக்கடி உரையாடியிருக்கிறார்.