ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பிரெக்சிற் திட்டத்தின் அடுத்த கட்ட பரிந்துரைகளை ஆதரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் தெரேசா மேயின் பிரெக்சிற் திட்டம் நான்கு மாற்றுவழிகளில் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டது. ஆனாலும் ஒருமுறையும் பெரும்பான்மை பெற்றுக் கொள்ளப்படவில்லை.இந்நிலையில் டோரி உறுப்பினர் ஒருவர் பதவி ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று இரவு வாக்களித்த வாக்குகள் அடையாள வாக்குகளாக கருதப்படுவதால் அவை சட்டப்பூர்வமாக இணைக்கப்படவில்லை. அதனால் முன்மொழிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு அரசாங்கம் தள்ளப்படவில்லை.

உடன்படிக்கை எதுவுமின்றி விலகுவது தொடர்பில் முடிவை பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருப்பதற்கு பிரித்தானியா காலநீடிப்பை வேண்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான பிரதமர் தேரேசா மேயின் திட்ட முன்மொழவுகள் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது.

அதன் விளைவாகரூபவ் கடந்த 29 ஆம் திகதியுடன் விலகும் தீர்மானத்தை பிற்போட ஒப்புக் கொள்ளும்படி ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்கும் நிலைக்கு பிரதமர் தெரேசா மே நிர்பந்திக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்துரூபவ் பிரெக்சிற் செயன்முறையின் கட்டுப்பாடு அரசாங்கத்தை மீறி நாடாளுமன்றத்திடம் கொண்டுவரப்பட்டது. அதன்படி பெரும்பான்மையை பெறும் மாற்று வழியைத் தேடுவதற்கு தொடர்ச்சியான வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.