ஓராண்டில் நடைபெறும் நான்கு கிறேண்ட்ஸ்லேம் கிண்ணங்களில் இரண்டாவதான பிரென்ச் பகிரங்க தொடர் பெரிஸில் நடைபெறுகிறது.

இதன் மூன்றாம் சுற்றுப் போட்டியொன்றில் ரபாயெல் நடால் பிரான்சின் ரிச்சர்ட் கஸ்கட்டை எதிர்த்தாடினார்.

தனது வழமையான ஆற்றலை போட்டியின் ஆரம்பம் முதலே வெளிப்படுத்திய நடால் முதலிரண்டு செட்களையும் 06 – 03 மற்றும் 06 – 02 என தனதாக்கினார்.

மூன்றாம் செட்டில் மேலும் திறமையாக செயற்பட்ட நடால் அந்த செட்டில் 6 புள்ளிகளை ஈட்டினார்.

நடாலின் ஆற்றலுக்கு இணையான திறமையை போட்டியின் மூன்றாம் செட்டிலும் ரிச்சர்ட் கெஸ்கட்டினால் வெளிப்படுத்த முடியவில்லை.

அந்த செட்டில் அவரால் 2 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது.

இதன்படி மூன்றாம் செட்டையும் 06 – 02 என தனதாக்கிய நடால் முன்னோடி காலிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தார்.