ற்றர்பரோ இடைத்தேர்தலில் பிரெக்ஸிற் கட்சியை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொழிற்கட்சி வெற்றி கொண்டது.

தொழிற்கட்சியின் செயற்பாட்டாளர் லிசா போர்ப்ஸ் தனது தொகுதியில் 31% வாக்குகளைப் பெற்றார். பிரெக்ஸிற் கட்சியின் மைக் கிரீன் 29% வாக்குகளைப் பெற்றார். இதன்மூலம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

வெற்றிபெற்ற லிசா போர்ப்ஸ் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில்; எனது தொகுதியில் நீங்கள் எனக்கு வாக்களித்ததன் மூலம் அரசியல் பிளவுகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டன என்றும் அரசியல்மீதான நம்பிக்கை தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நைஜல் ஃபராஜ்ஜினால் உருவாக்கப்பட்ட பிரெக்ஸிற் கட்சி இந்தத் தேர்தலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஆளும் கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சி 21% வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மேலும் லிபரல் ஜனநாயக் கட்சி 12%, வாக்குகளைப்பெற்று நான்காவது இடத்திலும் பசுமைக் கட்சி 3% வாக்குகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.