லண்டனில் உள்ள பணக்கார குடும்பம் ஒன்று உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளது. அவர்கள் தங்கள் சுற்றுலா அனுபவங்களை புகைப்படம் எடுக்க தங்களுடன் எப்பொழுதும் இருக்கும்மாறு ஒரு புகைப்பட கலைஞரை அழைத்துச்செல்ல திட்டமிட்டனர்.

இதையடுத்து அந்த குடும்பம் தாங்கள் செல்லும் சுற்றுலாவை முழுமையாக புகைப்படம் எடுத்து தர ஒரு  புகைப்பட கலைஞர் தேவை என ஒரு வெப்சைட்டில் விளம்பரம் செய்தது.

அந்த விளம்பரத்தில் :” நாங்கள் குடும்பத்துடன் ஃபார்முலா ஒன் கார் பந்தையம், அபுதாபி, மாலதீவுகள், மார்டிகிராஸ், ரியோ டி ஜெனிரியோ திருவிழா, ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவிருக்கிறோம்.

எங்களது சுற்றுலாவை புகைப்படம் எடுக்க குறைந்தது 5 ஆண்டுகளாவது லைஃப் ஸ்டைல் புகைப்பட கலையில் அனுபவம் உள்ள புகைப்பட கலைஞர் தேவை.

அதில் தேர்வு செய்யப்படுபவர் ஒரு நாளுக்கு 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். மேலும் அவருக்கு சுகவீன விடுப்பு மற்றும் ஆண்டிற்கு 30 நாட்கள் விடுமுறை வழங்கப்படும்.

இது மட்டும் இல்லாமல் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர் ஆண்டில் பெரும்பாலான நாட்கள் எங்களுடன் வெளிநாடுகளுக்கு பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும். மேலும் இந்த வேலைக்கு தேர்தெடுக்கப்படுபவருக்கு டிராவல், உணவு, தங்கும் இடம் அனைத்தும் வழங்கபடும்.

மேலும் இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு சம்பளமாக 80 ஆயிரம் யூரோக்கள் வழங்கப்படும். கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த வேலைக்கு ஆட்களை தேடி வருகிறோம். வரும் பிப். மாதத்திற்குள் எங்களுக்கு ஒரு சிறந்த புகைப்பட கலைஞர் கிடைப்பார் என நம்புகிறோம். ” என குறிப்பிட்டடிருந்தனர்.